தமிழ்நாட்டில் 9 இடங்களில் சதமடித்த வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

By SG Balan  |  First Published Apr 9, 2024, 9:08 PM IST

தமிழ்நாட்டில் இன்று 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெயில் வாட்டி எடுத்தது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெயில் வாட்டி எடுத்திருக்கிறது.

ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெயில் கொளுத்தியது. சேலம் (102), கரூர் பரமத்தி (102), நாமக்கல்லில் (101) ஆகிய இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. மதுரை விமான நிலையம், வேலூர், தருமபுரி ஆகிய இடங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் அடித்திருக்கிறது. பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது.

Tap to resize

Latest Videos

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்ரல் 9) மற்றும் நாளை(ஏப்ரல் 10) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்." என்று கூறப்பட்டுள்ளது.

7வது முறையாக சென்னை வந்த பிரதமர் மோடி... தி.நகர் முதல் தேனாம்பேட்டை வரை ரோடு ஷோ!

ஏப்ரல் 11ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 12, 13ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 14, 15ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அன்றைய தினம் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மற்ற பகுதிகளில் ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வருவதால் அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாள் லீவு! புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

click me!