பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு..? யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ தீவிர சோதனை..

By Thanalakshmi VFirst Published Oct 7, 2022, 12:26 PM IST
Highlights

சேலத்தில் சாமானிய மக்களை காக்க புரட்சியாளராக மாறும் நோக்கத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறிய இளைஞர்கள் வீட்டில், என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 
 

சேலம் மாட்டம் ஓமலூர் அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காவல்துறையின் வாகனசோதனையின் போது, கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி, முகமூடி, துப்பாக்கி செய்யும் உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 
 
பின்னர் விசாரணையில், அவர்கள் சேலம் மாநகரை சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரகாஷ் என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் இருவரும் சேலம்‌ செட்டிச்சாவடி பகுதியில்‌ வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, யூடியூப் பார்த்து வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தனர்.

மேலும் படிக்க:எய்ம்ஸ்காக இபிஎஸ் காட்டிய நிலம் இங்கே..! செங்கலை காட்டிய உதயநிதி எங்கே..? ஆர் பி உதயகுமார் கேள்வி


 இதனையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு என்‌ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து என்‌ஐஏ அதிகாரிகள்‌ மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்‌ ஊத்துமலை அருகே செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு செல்லும் லாரிகளில் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டம் தீட்டியதாக தெரியவந்தது.

அதுமட்டுமின்றி சாமானிய மக்களை காக்கும் நோக்கில் புரட்சியாளராக மாறுவதற்கு துப்பாக்கி தயாரித்ததாகவும் கிச்சிப்பாளையம்‌ பகுதியைச்‌ சேர்ந்த கபிலர்‌ என்பவர் துணையாக இருந்ததாகவும் கூறினர். இதையடுத்து கபிலரை கைது செய்த என்ஐஏ போலீசார், மூவரையும் ‌சேலம்‌ மத்திய சிறையில்‌ அடைத்தனர்‌

மேலும் படிக்க:போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து ஒரு லட்சம் மோசடி..! மர்ம நபரை தட்டி தூக்கிய போலீஸ்

இவர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும்‌ இடையே ஏதேனும்‌ தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்‌ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று காலை 6 மணி முதல்‌ இளைஞர்கள்‌ வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த வீட்டில்‌ சோதனையில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌. தேசிய புலனாய்வு பிரிவு டிஎஸ்பி செந்தில்குமார்‌ தலைமையில்‌ 6 பேர்‌ கொண்ட குழுவினர்‌ தீவிர சோதனையில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

click me!