விடுதலை புலிகள் அமைப்புகளுடன் தொடர்பு.. துப்பாக்கி பறிமுதல் வழக்கு.. என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை..

Published : Oct 09, 2022, 12:47 PM IST
விடுதலை புலிகள் அமைப்புகளுடன் தொடர்பு.. துப்பாக்கி பறிமுதல் வழக்கு.. என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை..

சுருக்கம்

ஓமலூரில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்த வழக்கில் சேலம் மற்றும் சிவகங்கையில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட இருவரிடமிருந்து துப்பாக்கி, வெடிமருந்துகள், துப்பாக்கி தயாரிக்கும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.   

தமிழகத்தில் சேலம் மற்றும் சிவகங்கை ஆகிய இரு இடங்களில் கடந்த 7 ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ஓமலூரில் இளைஞர்கள் இருவர் தனியாக வாடைகைக்கு வீடு எடுத்து தங்கி, யூடியூப் பார்த்து தூப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. 

அவர்களிடம் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ போலீசார், துப்பாக்கி, வெடிமருந்துகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் மற்றும் வணிக ரீதியான இடங்களில் தாக்குதல் நடத்த, சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரித்ததாக வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க:பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு..? யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ தீவிர சோதனை..

ஓமலூர் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் என்.ஐ.ஏ க்கு மாற்றப்பட்டது. புதிதாக வழக்கு பதிவு செய்த என்.ஐ.ஏ போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு சொந்த இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். 

இந்த சோதனையில், துப்பாக்கி, வெடிமருந்துகள், விடுதலை புலிகள் பற்றிய புத்தகங்கள், டிஸ்குகள், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் புகைப்படங்கள், துப்பாக்கி ஆயுதங்கள் தயாரிப்பதற்கு வாங்கிய உபகரணங்களின் ரசீதுகள், காடுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 மேலும் படிக்க:நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் என்ஐஏ திடீர் சோதனை..! அதிர்ச்சியில் சீமான் ..! என்ன காரணம் தெரியுமா??

இந்நிலையில் இன்று மீண்டும் தமிழ்நாட்டில் சேலம் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக சிவகங்கையில் ஓட்டுனராக உள்ள விக்னேஷ் என்பவர் வீட்டில் என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொணடனர். அங்கிருந்த விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களையும் கைப்பற்றினர்.

இதற்கிடையே விக்னேஷ்வரன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவிய நிலையில், அவருக்கும் தங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அந்தக் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
சக மாணவர்களால் அடித்து கொ**ல்லப்பட்ட +2 மாணவன்.. சமுதாயம் எங்கே போகிறது..? அன்புமணி அதிர்ச்சி