மக்களே உஷார்.! இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. வானிலை மையம் விடுத்த அலெர்ட் !

By Raghupati RFirst Published May 20, 2022, 9:54 AM IST
Highlights

Tamilnadu Rains : தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலத்திற்கு இடையிலும் கனமழை பெய்து வருகிறது. தினமும் பல்வேறு மாவட்டங்களில் தீவிர மழை பெய்து வருவதால் வெப்பம் குறைவாக உள்ளது. இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்று முதல் வருகிற 23-ஆம் தேதி வரை தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் வருகிற 23-ஆம் தேதி வரை லட்சத்தீவு, கர்நாடகா கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் ,மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்,  வட கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு கொங்கன் பகுதிகள் ஆகியவற்றில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால்  மீனவர்கள் இந்த குறிப்பிட்ட நாட்களில் மீன்பிடிக்க இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டேன்.. பல்டி அடித்த ரஜினிகாந்த்.! தூத்துக்குடி சம்பவத்தில் 'திடீர்' திருப்பம் !

இதையும் படிங்க : பாமக முக்கிய பிரமுகரை தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜக போட்ட ஸ்கெட்ச்.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே !

click me!