புத்தாண்டுக் கொண்டாட்டம்…. 1 மணி வரைக்கும் தான் அனுமதி…  நட்சத்திர விடுதிகளுக்குக் கடும் கட்டுப்பாடு!!

First Published Dec 30, 2017, 9:23 AM IST
Highlights
New Year celebration strict control over star hotels


புத்தாண்டுக் கொண்டாட்டங்களை வரும் 31-ம் தேதி நள்ளிரவு 1 மணியுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

சென்னையில்  ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் விடிய விடிய நடைபெறும். சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் பீச், கிழக்குக் கடற்கரை சாலை என புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டும். மேலும் நட்சத்திர விடுதிகளிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கொண்டாட்டங்கள் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குடியும், கும்மாளமுமாய் இருக்கும்

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நீச்சல் குளத்தின்மேல் மேமை அமைத்து கொண்டாட்டங்கள் நடைபெற்றபோது மேடை சரிந்து விழுந்து 3 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து புத்தாண்ட கொண்டாட்டங்ககுக்கு காவல் துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

. இந்நிலையில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து நட்சத்திர விடுதிகளின் நிர்வாகிகளுக்கு அறிவுறைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு சில முக்கியமான கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டது. அதன்படி, பொழுது போக்கு இடங்களில், புத்தாண்டு தினத்தைக் கொண்டாட அனுமதி கோரி விண்ணப்பிப்போருக்கு வரும் 31 ஆம் தேதி மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை, கொண்டாட்டங்களுக்கான சிறப்பு உரிமம் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல், மதுபான விற்பனையை நிறுத்தி கொள்வதுடன் கொண்டாட்டங்களைக் கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நட்சத்திர ஓட்டல் உணவு விடுதிகள் , கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். விடுதியின் நீச்சல் குளங்கள் மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணிவரை மூடிவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டன.

click me!