அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு… புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை!!

Published : Dec 25, 2021, 07:12 PM IST
அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு… புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை!!

சுருக்கம்

ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரானால் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் தற்போது 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் தென்படுகின்றன. ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்துவிட்டனர். இதன் மூலம், தமிழகத்தில் ஒமைக்ரானிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7ல் இருந்து 12 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை  தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச பயணிகள் 14 நாட்களுக்கு முன்பே பயண விவரத்தை பதிவிட வேண்டும், 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் வந்திருக்க வேண்டும், பரிசோதனையில் எஸ் வகை மரபணு கண்டறியப்பட்டால் ஒமைக்ரான் ஆய்வு மேற்கொள்ளப்படும், கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் 7 நாட்கள் வரை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் உத்தேச பரிசோதனை, கொரோனா அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் சுகாதாரத்துறையை அணுக வேண்டும், தொற்று உறுதியான நபரின் முன், பின் இருக்கைகளில் பயணித்தவர்களுக்கும் பரிசோதனை, நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.! இதை செய்தால் மட்டுமே PM கிசான் ரூ.6,000.. ஆட்சியர் அதிரடி
துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் !