
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேகாலயா ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தின் முழுநேர ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிந்து அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகிய பிறகு மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும் தமிழகத்திற்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன.
இந்நிலையில், தற்போது தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.