
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ காட்சியை தினகரன் ஆதரவு வெற்றிவேல் வெளியிட்டார்
அதன்பின்னர், சாதாரண மக்கள் முதற்கொண்டு அரசியல் கட்சிகள் வரை வெவ்வேறு விளக்கங்களை முன்வைத்தன...
இதனை தொடர்ந்து தற்போது தினகரன் ஆதரவாளர் ஒருவர் பல புது விளக்கங்களை அடுக்கடுக்காக அடுக்கி வைக்கிறார்....அதில்
ஜெ வீடியோவை பற்றி ....
“அந்த வீடியோவோட ஆதன்டிகேஷன் பத்தி கேள்வி எழுப்புறாங்க!! நல்லது சிறப்பு!! கடந்த ஒரு மணி நேரத்துல சேகரித்த தகவல்கள், அம்மா அந்த வீடியோ வில் #முதல்மரியாதை படம் பார்க்கிறார்..அக்டோபர் 3,15,23 மற்றும் நவம்பர் 2 , 7, 12 ஆகிய தேதிகளில் அந்த படம் ஜெயா டிவில ஒளிபரப்பு ஆகியிருக்கு!! இங்க நாம பார்க்க நோட் பண்ண வேண்டிய பாயின்ட் #தீபக் கோட பேட்டி, தீபக் சொல்றார் அம்மா ஜெய் அனுமான் சீரியல் பார்த்தாங்க ன்னுட்டு!! நவம்பர் 7ம் தேதி ஜெய் அனுமான் சீரியல் முடிஞ்சதும் முதல் மரியாதை படம் ஒளிபரப்பு ஆகியிருக்கு!!அபோலோ விசிட்டர்ஸ் லிஸ்ட்லயும் தீபக் நவம்பர் 7ம் தேதி வந்ததாக பதிவாகியிருக்கு!!
ஆக!! அம்மா நவம்பர் 7-23 வரை உயிரோட தான் இருந்துள்ளார்!! நவம்பர் 26ம் தேதி எய்ம்ஸ் குழு டேக் ஓவர் பண்றாங்க!! அம்மா மரணம் என்ற செய்தி டிசம்பர் 2-5 வரை பரப்பப்படுது!!”
ஓபிஎஸ் பற்றி .....
“ஹைலைட் என்னன்னா டிசம்பர் 1ம் தேதி விசிட்டர்ஸ் லிஸ்ட்ல ஓபிஎஸ் பேரு இருக்கு!!”
வெங்கைய்யா நாயுடு பற்றி ......
“இதை என்னன்னு சொல்றது நவம்பர் 12ம் தேதி வந்த எய்ம்ஸ் சிறப்பு குழுவினர் வந்த அதே Indian Airlines flight #507 ல வெங்கைய்யா நாயுடுவும் வந்திருக்கார் டிசம்பர் 7ம் தேதி வரை ரெயின் ட்ரீ ஹோட்டல்ல ரூம் நம்பர் 410 லக்ஸூரி ஸ்வீட்ல தங்கி இருந்திருக்கிறார்
வெங்கைய்யா நாயுடுவை டெய்லியும் மஃபாய் சந்திச்சிருக்கான்!! நாலு நாள் ஓபிஎஸ்....டிசம்பர் 1ம் தேதி காலை வாக்கிங் போக YMCA க்ரௌன்ட் க்கு வெங்கைய்யா நாயுடுவ ஓபிஎஸ் கூட்டினு போயிருக்கார்....
அம்மா சாகல சாகடிக்கப்பட்டுள்ளார்!!
அம்மா இட்லி சாப்பிட்டது உண்மை!! அக்டோபர் 7, 12, 18, 29 ஆகிய தேதிகளில் சிஆர் சரஸ்வதி அபோலோ வில் அம்மாவை சந்தித்துள்ளார்!! உணவு கொண்டு சென்றதாக அபோலோ ரிஜிஸ்ட்டர்ல பதிவாகியிருக்கு அதே தேதிகளில் போயஸ் கார்டனில் சமையல் பணியாளர்கள் உள்ள போயிருக்காங்க!! 7 ,12 அக்டோபர் காலை 7-3 வேலை செய்திருக்காங்க....
போயஸ் கார்டன் வேதா இல்லம் சென்ட்ரியோட ரிஜிஸ்டர்ல உள்ள தகவல்கள் இவை!!”
மேற்குறிப்பிட்ட அனைத்தும் தினகரன் ஆதரவாளர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.ஆனால் இது குறித்த ஆதாரம் எதையும் அவர் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.