
“ ஜெ” இட்லி சாப்பிட்ட வீடியோ எங்கே..? துருவி கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..
மருத்துவமனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டார், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.
நாளை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,ஒரு நாள் முன்னதாக வீடியோ வெளியானதால்,மற்ற அரசியல் கட்சி முதல் பொதுமக்கள் வரை அரசியல் நோக்கத்திற்காக தான் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர் என தெரிவித்து வருகின்றனர்
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,தற்போது வெளியாகி உள்ள எடிட்டிங் செய்யப்பட்ட இந்த வீடியோவில்,ஜெயலலிதா அவர்கள் ஜூஸ் அருந்தும் காட்சி உள்ளது.
ஆனால் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சையில் இருந்த போது,சி.ஆர் சரஸ்வதி, திண்டுக்கல் சீனிவாசன், பொன்னையன் உள்ளிட்ட பலரும் அம்மா நலமாக இருக்கிறார்கள்,அவர் இட்லி சாப்பிட்டார்,சட்னி சாப்பிட்டார்,பழங்கள் சாப்பிட்டார்..என தொடந்து தெரிவித்து வந்தனர்
இதனை தொடர்ந்து தற்போது,ஜெ அவர்கள் ஜூஸ் அருந்துவதை போன்ற காட்சி மட்டுமே வீடியோவில் உள்ளது.... இட்லி சாப்பிட்ட காட்சி அடங்கிய வீடியோ எங்கே என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.