தமிழகத்தின் புதிய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் - நள்ளிரவில் பொறுப்பேற்றார்!!

Asianet News Tamil  
Published : Jul 01, 2017, 09:09 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
தமிழகத்தின் புதிய டிஜிபி  டி.கே.ராஜேந்திரன் - நள்ளிரவில் பொறுப்பேற்றார்!!

சுருக்கம்

new dgp rajendran

தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன், நள்ளிரவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக உளவுப்பிரிவு போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததது. இதையடுத்து அவருக்கே பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே வேளையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க பலத்த எதிர்ப்பும் கிளம்பியது 

இந்நிலையில் தமிழக புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. யார்? என்பதை முடிவு செய்வதற்காக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டெல்லி சென்று மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கொடுத்து, மத்திய அரசு அனுமதியோடு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று காலையில் தகவல் பரவியது.

எந்த நேரத்திலும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு போலீசார் வட்டாரத்திலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் நிலவியது.

இதனிடையே மிகுந்த  எதிர்பார்ப்புக்கிடையே   தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு இரவு 8 அணிக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து டி.கே.ராஜேந்திரன் நேற்று நள்ளிரவில் டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 19 January 2026: கரூர் விவகாரம்.. சிபிஐ முன்பு இன்று மீண்டும் ஆஜராகும் விஜய்
ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!