வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை..!!! - மீண்டும் புயலா?

First Published Dec 17, 2016, 9:19 AM IST
Highlights


வங்க கடலில் உருவான வார்தா புயல் கடந்த 12–ந் தேதி சென்னையில் கரையை கடந்தது. அப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மரங்களும், ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்தன.

பெரும் சேதத்தை ஏற்படுத்திய வார்தா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் தற்போது நிலைகொண்டு உள்ளது.

இந்நிலையில், வங்க கடலில் தெற்கு அந்தமானையொட்டிய கடல் பகுதியில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. 

இதற்கிடையே, வங்க கடலில் தெற்கு அந்தமானையொட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இது மிக மிக தொடக்க நிலைதான். இப்போது உள்ள நிலையை வைத்து அது எந்த திசையை நோக்கி நகரும் என்று கூற இயலாது என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. மேலும் அரபிக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இல்லை என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

click me!