ரேசன் கார்டுக்கு 60 ஆயிரம் சப்ளை….சேகர் ரெட்டியின் சொந்த ஊரில் பிறந்திருந்தால் லக்கி….

Asianet News Tamil  
Published : Dec 17, 2016, 07:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
ரேசன் கார்டுக்கு 60 ஆயிரம் சப்ளை….சேகர் ரெட்டியின் சொந்த ஊரில் பிறந்திருந்தால் லக்கி….

சுருக்கம்

ரேசன் கார்டுக்கு 60 ஆயிரம் சப்ளை….சேகர் ரெட்டியின் சொந்த ஊரில் பிறந்திருந்தால் லக்கி….

வருமான வரித்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டியின் சொந்த ஊரில், ஒரு ரேசன் கார்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் வீதம் விநியோகம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர் எனக்கூறப்படும் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் பிடிபட்டது.

இதில் புதிய 2000 ஆயிரம் ரூபாய் கோட்டுக்கள் மட்டும் 70 கோடிக்கு இருந்ததாக கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஏடிஎம் லிருந்து 2000 ரூபாய் எடுக்கவே விழிபிதுங்கும் பொதுமக்கள் சேகர் ரெட்டிக்கு மட்டும் எப்படி 70 கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தன என புலம்புகின்றனர்.

இந்நிலையில் சேகர் ரெட்டியின் சொந்த ஊரான வேலுர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தொண்டான் துளசியில் கிராம மக்களுக்கு ரேசன் கார்டு ஒன்றுக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் வீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டியின் சொந்தஊரில் பிறந்திருந்தால் நமக்கும் 60 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்குமே என ஆதங்கப்படுகிறார்கள் அருகில் உள்ள கிராமத்தினர்…

PREV
click me!

Recommended Stories

Health Insurance : ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்ட மருத்துவ காப்பீடு! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
திருமாவளவன் அறிக்கை, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து வன்னியரசு பேட்டி