
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்காதா? பின்வாங்கும் மத்திய அரசு….ரசிகர்கள் குமுறல்….
தமிழகத்தின் பாராம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததையடுத்து கடந்த சில ஆண்களாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.
இதனால் அலங்காநல்லுர் ,அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன ஊர்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன,
ஜல்லிக்கட்டு தமிழக மக்களின் பாரம்பரியத்தின் பகுதி என்பதால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அண்மையில் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்யயப்பட்டது.
வரும் பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்படவில்லை என்றால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாவார்கள்.
இந்நிலையில் ரசிகர்களை மீண்டும் ஏமாற்றத்துக்கு ஆளாக்கி இருக்கிறார் மத்திய அமைச்சர்அனில் மாதவ் தவே.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.
இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் செயல்படும் நாம், உச்சநீதிமன்றத்தின் முடிவை மதிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு ஜல்லிக்கட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.