சசிகலாவை  ஆதரித்த  நிர்வாகிக்கு அடி உதை......!!!  பின்னி பெடலெடுத்த அதிமுக  தொண்டர்கள்......!!!

Asianet News Tamil  
Published : Dec 16, 2016, 06:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
சசிகலாவை  ஆதரித்த  நிர்வாகிக்கு அடி உதை......!!!  பின்னி பெடலெடுத்த அதிமுக  தொண்டர்கள்......!!!

சுருக்கம்

சசிகலாவை  ஆதரித்த  நிர்வாகிக்கு அடி உதை......!!!  பின்னி பெடலெடுத்த அதிமுக  தொடர்கள்......!!!

சசிகலாவை ஆதரித்த அமைச்சரை அதிமுக  தொடர்கள்  தாக்க  முயன்ற  சம்பவம் பொதுமக்களிடையே  பெரும்  பரபரப்பபை  ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை ஆரணியில் சசிகலாவை ஆதரித்து பேசிய அமைச்சரை அதிமுக தொண்டர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமசந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். அம்மா பேரவை மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் சசிகலாவை சின்னம்மா என குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதால் மோதல் வெடித்தது. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கட்சியின் ஒரு பிரிவினர் அடித்து விரட்டினர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சசிகலாவின் பேனர்களையும் அதிமுகவினர் கிழித்து எரிந்தனர். தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். ஆனால் தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு எதிர்ப்பு காணப்படுவதால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
click me!

Recommended Stories

டெய்லி எதுக்கு இப்படி குடிச்சிட்டு வரீங்க கேட்ட காதல் மனைவி.. ஃபுல் மப்பில் பிரவீன்குமார் செய்த அதிர்ச்சி
தமிழகத்தில் மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்.. வானிலை மையம் முக்கிய அப்டேட்