அரசியலுக்கு நிச்சயம் வருவேன்....! அத்தை இடத்தை  பிடிப்பேன்...!!  தீபா கர்ஜனை ....!!!

Asianet News Tamil  
Published : Dec 16, 2016, 05:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
அரசியலுக்கு நிச்சயம் வருவேன்....! அத்தை இடத்தை  பிடிப்பேன்...!!  தீபா கர்ஜனை ....!!!

சுருக்கம்

அரசியலுக்கு நிச்சயம் வருவேன்....! அத்தை இடத்தை  பிடிப்பேன்...!!  தீபா கர்ஜனை ....!!!

மறைந்த  முதலமைச்சர்  ஜெயலிதாவின் ,  அண்ணன்  மகள் தீபா, “  மக்கள் விரும்பினால்  நிச்சயம்  அரசியலுக்கு  வருவேன் , அத்தை இடத்தை  பிடிப்பேன் என ,  தனியார்  தொலைக்காட்சி  ஒன்றிற்கு   பேட்டி கொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன்  தீபக்  மற்றும்   மகள்  தீபா.    தீபக்கை பொறுத்தவரையில்  ஆரம்பத்திலிருந்தே சசிகலாவுடன்  தொடர்பில்  இருந்தவர்.  ஆனால் தீபா சற்று  தள்ளியே  இருந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது  ஜெயலலிதா  மறைந்ததால்  அவருடைய பதவியை  பிடிக்க சசிகலா முழுவீச்சில்  உள்ளார். இவருக்கு  அதிமுக  தொடர்கள்  ஆதரவு   கொடுத்து வருகிறார்கள்.

அதே சமயத்தில்,  சசிகலாவிற்கு  எதிராக , ஜெயலலிதாவின் அண்ணன்  மகள்   தீபா  தற்போது  களத்தில்  குதிக்க உள்ளார்.

இது  குறித்து  தனியார்  தொலைகாட்சிக்கு அளித்த  பேட்டியில், “  நான்  பிறந்தது  போயஸ்  கார்டனில்  தான்,  காலபோக்கில்  சசிகலாவால் , எங்கள்  குடும்பம்  அங்கிருந்து  வெளியேறியது , எனது  அத்தை( ஜெயலலிதா) சிறைக்கு  சென்றதும்  அவரால்  தான்  “ என குறிப்பிட்டார்.

மேலும், “ மக்கள்  விரும்பினால் , நிச்சயம்  அரசியலுக்கு வருவேன்.... அத்தையின்  இடத்தை  பிடிப்பேன்  என “ உறுதிபட  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  தீபாவுக்கும்  ஒருபக்கம்  ஆதரவு   பெருகி கொண்டே இருக்கிறது. தீபாவுக்காக  ஆங்காங்கே  பேனர்கள்   வைத்து   அவருக்கு  தற்போது  மக்கள்  மத்தியில் ஆதரவு  பெருகி  கொண்டே  வருகிறது என்பது குறிபிடத்தக்கது .

 

 

 

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

பிஞ்சு குழந்தைகளின் மரண ஓலம்.. இது தான் பாதுகாப்பான மாநிலமா..? முதல்வருக்கு தவெக கேள்வி
உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பிப்.8ல் பிரமாண்ட விழா நடத்தும் ஜாக்டோ ஜியோ