
சென்னையின் புதிய காவல் ஆணையர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்களை தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தேர்தல் ஆணைத்தால் பணிமாற்றம் செய்யப்பட்டார். இத்தகவல் தமிழக அரசுக்கு நேற்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆணையரை நியமிக்க 3 அதிகாரிகளின் பெயர் பட்டியலை அனுப்புமாறு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து ஏ.டி.ஜி.பி.க்களாக உள்ள கரன்சின்ஹா, (சி.பி.சி.ஐ.டி.) அசுதோஷ் சுக்லா (மதுவிலக்கு) திரிபாதி(சட்டம் ஒழுங்கு) ஆகியோர் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.
ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக திரிபாதி செயல்பட்டதாவும், அதனால் அவரை இமு்முறை கரன்சின்ஹா மற்றும் அசுதோஷ் சுக்லா ஆகிய இருவரில் ஒருவர் ஆணையராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.