
சென்னை மாநகர் காவல் ஆணையர் ஜார்ஜ் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாகவும்,சுதந்திரமாகவும் நடைபெற காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் பொறுப்பில் இருந்து பத்மஜாதேவி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டார். ஆனால் ஆணையர் ஜார்ஜ் மாற்றப்படமால் இருந்தார்..
இந்தச் சூழலில் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவியில் இருந்து ஜார்ஜை மாற்றுவதாக தேர்தல் ஆணையம் இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளதுபுதிய காவல் ஆணையர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஜார்ஜ்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவரது முழுப் பெயர் செபாஸ்டியன் ஜார்ஜ். 1984 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்.பயிற்சியை முடித்த இவர் 1987 ஆம் ஆண்டு தமிழகத்தின் ராமநாதபுரத்தில் தனது காவல்துறை வாழ்க்கையை தொடங்கியவர்.
கூடங்குளம், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட போராட்டங்களை திரம்பட கையாண்டததால், சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்ற இவர் சென்னை மாநகர காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார்.