புதிய தலைமை செயலாளராகிறார்  எஸ்.வி.சேகரின் அண்ணி கிரிஜா வைத்தியநாதன்....!!!

 
Published : Dec 22, 2016, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
புதிய தலைமை செயலாளராகிறார்  எஸ்.வி.சேகரின் அண்ணி கிரிஜா வைத்தியநாதன்....!!!

சுருக்கம்

புதிய தலைமை செயலாளராகிறார்  எஸ்.வி.சேகரின் அண்ணி கிரிஜா வைத்தியநாதன்....!!!

தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் பதவியிலிருந்து  நீக்கப்பட்டதையடுத்து,  தற்போது  புதிய  தலைமை செயலாளராக, நடிகர் எஸ்.வி.சேகரின் அண்ணி கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிஜா வைத்தியநாதன், 1981 ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

அதாவது, தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவின் வீடு மற்றும் அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகள், ராம் மோன் ராவின் தலைமை செயலக அறை ஆகியவற்றில் நேற்று அதிகாலை முதல் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியதில்  ஏராளமான பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பி.எஸ் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் ராம்  மோகன்  ராவை  பதவியில்  இருந்து  நீக்கிப்பட்டு ,    தற்போது புதிய  தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்  நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும்   இவர் கூடுதலாக  நிர்வாக சீர்திருத்தம், கண்கானிப்பு ஆனையர் பதவிகளை கவனிப்பார் என தெரிகிறது.

தற்போது  புதிய  தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட  கிரிஜா வைத்தியநாதன், நடிகர் எஸ்.வி.சேகரின் சொந்த அண்ணி  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
நெல்லை மக்களே ரெடியா? பொருநை மியூசியம்: டிக்கெட் விலை முதல் டைமிங் வரை.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ!