நடிகர் எஸ்.வி.சேகரின் சொந்த அண்ணிதான் கிரிஜா வைத்தியநாதன் - சுவாரஸ்ய தகவல்கள்

 
Published : Dec 22, 2016, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
நடிகர் எஸ்.வி.சேகரின் சொந்த அண்ணிதான் கிரிஜா வைத்தியநாதன் - சுவாரஸ்ய தகவல்கள்

சுருக்கம்

புதிய தலைமை செயலாளராகிறார்  எஸ்.வி.சேகரின் அண்ணி கிரிஜா வைத்தியநாதன்....!!!

தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் பதவியிலிருந்து  நீக்கப்பட்டதையடுத்து,  தற்போது  புதிய  தலைமை செயலாளராக, நடிகர் எஸ்.வி.சேகரின் அண்ணி கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிஜா வைத்தியநாதன், 1981 ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

அதாவது, தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவின் வீடு மற்றும் அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகள், ராம் மோன் ராவின் தலைமை செயலக அறை ஆகியவற்றில் நேற்று அதிகாலை முதல் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

இந்த சோதனையில் ஏராளமான பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இன்று காலை 7 மணி வரை, சுமார் 25 மணி நேரம் ராம் மோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதன்பிறகே ஆவணங்களுடன் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பி.எஸ் அவசர ஆலோசனை நடத்தினார். அதையடுத்து இன்று காலை 7 மணி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதற்கான உத்தரவு இன்று காலை 7.30 மணி அளவில் ராம் மோகன் ராவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,   தற்போது புதிய  தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்  நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் கூடுதலாக   நிர்வாக

சீர்திருத்தம், கண்கானிப்பு ஆனையர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது  புதிய  தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட  கிரிஜா வைத்தியநாதன், நடிகர் எஸ்.வி.சேகரின் அண்ணி  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
Tamil News Live today 23 December 2025: ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்