
அரியலூர்
ஜெயங்கொண்டத்தில், நகராட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் ரூ.2 கோடியே 10 இலட்சம் மதிப்பில் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டினார் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ள வாரச் சந்தையின் கிழக்குப் பகுதியில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூசை போடப்பட்டது.
இந்த அலுவலகத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 10 இலட்சம் ஆகும்.
இதனை ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் புகழேந்தி, நகர வடிவமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், பணி மேற்பார்வையாளர் பிரசாத், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் செல்வராஜ் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.