
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்துக்கான புதிய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
ஊனமுற்றோர் என அழைக்கப்பட்டு வந்தவர்களை கடந்த திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஊனமுற்றோர் நல இயக்ககம் என்ற பெயர் மாற்றப்பட்டு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் என அழைக்கப்பட்டது.
இந்த மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை கே.கே.நகர். இஎஸ்ஐ மருத்துவமனை அரகே செயல்பட்டு வந்தது.
இந்த அலுவலகத்துக்கு கடந்த அதிமுக ஆட்சியில் புதிய கட்டடம் கேட்ட 3 போடியே 74 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த புதிய கட்டடம் லேடி வெலிங்டன் கலலூரி வளாத்துக்கும் கட்டப்பட்டு வந்ததது. தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக கட்டடத்தை இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.