
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலை குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் சயன் ஆகியோருக்கு கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்தது மனோஜ் சாமியார் தான் என தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் ஓம்பகதூர், மற்றும் கிஷன்பகதூர் ஆகிய இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு கார்களில் வந்ததாக் கூறப்படும் மர்ம நபர்கள், காவலாளிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் ஓம்பகதூர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய கிஷன்பகதூரை மீட்ட சுற்றத்தார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் தற்போது கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய கிஷன்பகதூரை மீட்ட சுற்றத்தார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் காரில் காரில் வந்ததாகக் கூறப்படும் கூலிப்படையினரை தேடும் பணியில் ஈடுபட்டபோது இதில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் கொடநாடு கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
இதனையடுத்து, சயன் என்பவர் பாலவிபத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். இதனையடுத்து கேரமாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், திபு, சதீசன் உதயகுமார் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. அதேபோல இந்த சம்பவத்தில் மூளையாக செயல் பட்ட மனோஜ் சாமியாரை கைது செய்தது.
மேலும், மனோஜ் சாமியாரிடம் விசாரணையை செய்ததை அடுத்து, கார் டிரைவர் கனகராஜ் மற்றும் சயன் ஆகியோருக்கு சாமியார் கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனால் கொடநாடு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.