பேருந்து பயணிகளுக்கு இனி கவலை இல்லை.! புதிய செயலியை அறிமுகம் செய்த தமிழக அரசு

By Ajmal Khan  |  First Published Jan 21, 2025, 2:34 PM IST

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் புதிய செயலியை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி பேருந்து தகவல்கள், வழித்தடங்கள், வசதிகள் மற்றும் புகார் பதிவு செய்யும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.


பேருந்து பயணிகளுக்கு புதிய வசதி

சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மிகப்பெரிய பேருந்து நிலையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்தில் நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் செயலியை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிமுகம் செய்துள்ளது.  

Latest Videos

மொபைல் செயலி அறிமுகம்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவருமான பி.கே.சேகர்பாபு  இன்று  சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில் கலைஞர் நூற்றாண்டு புறநகர் பேருந்து முனையத்தின் (KCBT) பயணிகள் அனுபவத்தை மேம்படுத்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் KCBT மொபைல் செயலியை தொடங்கி வைத்தார். போக்குவரத்தை நவீனமாக்கும் நோக்கத்துடன் தொடங்கிய இந்த முயற்சி பயணிகளுக்கு மெருகூட்டப்பட்ட மற்றும் சீரான பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.

பயணிகள் வசதியை மாற்றும் செயலி :

KCBT மொபைல் செயலி பயணத்தை எளிமையாக்கவும், அணுகுமுறையை மேம்படுத்தவும், பயணியர்களுக்கு தனிப்பட்ட உதவியை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. Android மற்றும் iOS தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய இந்த செயலி, பயணத்தை எளியதும் பலனளிப்பதுமானதாக மாற்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்
KCBT-க்கு வழிகாட்டுதல் :

பயணியின் தற்போதைய இடத்திலிருந்து KCBT-க்கு திசை மற்றும் வழிகாட்டியாக விளங்குகிறது

பேருந்து தகவல்கள் :

TNSTC மற்றும் SETC பேருந்துகளின் நிறுத்தம் விவரங்கள், செல்லும் இடங்கள், நேரம் மற்றும் பயண நேரம் வழங்கப்படுகிறது.

MTC பேருந்து எண்கள், பாதைகள் மற்றும் நிறுத்தங்கள் தொடர்பான தகவல்களையும் வழங்குகிறது.

நிறுத்துமிடம் குறித்த தகவல்கள் :

TNSTC மற்றும் SETC பேருந்துகளுக்கான நடைமேடை  மற்றும் தளம் குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது.

வசதிகள் மற்றும் அம்சங்கள் :

KCBT-யில் உள்ள வசதிகள் மற்றும் அவற்றின் இடங்கள், கட்டண விவரங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை பயணிகள் அறியச் செய்கிறது.

கருத்து மற்றும் புகார் தீர்வு :

பயணிகள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி செயலியின் மூலம்  கருத்துகள் அளிக்கவும் மற்றும் புகார்கள் பதிவு செய்யவும் செயலியின் தரத்தை மேம்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

உதவி எண் மற்றும் கேள்வி-பதில்கள் :

அவசர தேவைக்கு உதவி எண்ணை உடனடியாக அணுகலாம். அத்துடன், அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கான கேள்வி-பதில்கள் (FAQ) பகுதி மற்றும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை மூலம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!