சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாணவர் அணி இவ்வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், திமுக இது பொய்யானது எனக் கூறியுள்ளது.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் திமுக அனுதாபியான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் போது சார் கூட ஒன்றாக இருக்க வேண்டும் என ஞானசேகரன் கூறியதாக மாணவி வாக்குமூலம் அளித்திருந்தார். இதனையடுத்து யார் அந்த சார் என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஞானசேகரன் யார்.? அதிமுக வீடியோ
இந்த நிலையில் இந்தியா வென்றது என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில் ஞானசேகரன் என்று தனக்கு நண்பர் இருப்பதாக கூறியிருந்தார். இதனை அதிமுகவின் மாணவர் அணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொய்யாக எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அதில் ஞானசேகரன் திமுக இல்லை என்றார்கள், பின் திமுக அனுதாபி, இப்போது சபாநாயகர் அப்பாவுவின் தம்பியா?? அடுத்தபடியாக என்ன ? என கேள்வி கேட்டு பதிவிடப்பட்டுள்ளது.
ஞானசேகரன் திமுக இல்லை என்றார்கள்,
பின் திமுக அனுதாபி,
இப்போது சபாநாயகர் - ன் தம்பியா??
அடுத்தபடியாக என்ன ? pic.twitter.com/REKO7ChZbc
நடந்தது என்ன.?
இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக திமுக தரப்பில் கூறுகையில் இந்தியா வென்றது ' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அப்பாவு அவர்கள் பேசுகையில், எனக்கு ஒரு நண்பர் வந்து சால்வை போட்டார். பெயரை கேட்ட போது அதிர்ந்து விட்டேன். ஞானசேகரன் என்று சொன்னார். இல்லங்க ஐயா நான் வேற ஞானசேகரன் என்று சொன்னார். அண்ணாபல்கலைக் வழக்கை குறிப்பிட்டு பேசும் போது கீழே உள்ள ஞானசேகரன் என்பவரைக் குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அப்பாவு அவர்கள் கிளம்பும்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கீழே உள்ள ஞானசேகரனை கை காட்டி அப்பாவு அவர்கள் பேசிய பேச்சு தவறாக பரப்பப்படும் என்று விளக்கமும் அளித்து இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்கூட்டணியில் உள்ள அதிமுகவும் பாஜகவும் பொய் செய்திகளை பரப்புவதே தங்களின் அடிப்படை கொள்கையாக வைத்துள்ளனர்!
அதிமுக மாணவரணியின் அதிகாரபூர்வ பக்கத்தில் எடிட் செய்யப்பட்ட விடியோவை வெட்கமின்றி சங்கிகள் போன்று பதிவிட்டுள்ளனர்.
அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு என்று அனைவரும் கேட்க… pic.twitter.com/aZYYd0poyM
எடிட் செய்யப்பட்ட வீடியோ
மேலும் திமுக ஐடி பிரிவு சார்பாகவும் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கள்ளக்கூட்டணியில் உள்ள அதிமுகவும் பாஜகவும் பொய் செய்திகளை பரப்புவதே தங்களின் அடிப்படை கொள்கையாக வைத்துள்ளனர்! அதிமுக மாணவரணியின் அதிகாரபூர்வ பக்கத்தில் எடிட் செய்யப்பட்ட விடியோவை வெட்கமின்றி சங்கிகள் போன்று பதிவிட்டுள்ளனர். அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு என்று அனைவரும் கேட்க தொடங்கியதால் தங்கள் உடம்பில் ஓடுவது வன்மமும் காழ்ப்புணர்ச்சியும் தான் என்று அதிமுக அடிமைகள் நிரூபித்துள்ளனர் என திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.