
பீதியை கிளப்பம் 2 புயல்..! 7 மற்றும் 12 ஆம் தேதி மீண்டும் கதிகலங்க வைக்குமா...?
ஆந்திர மாநிலம் ராய சீமாவில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தற்போது ஹைதராபாத் மட்டுமின்றி தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே வட தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்
கூடும் எனவும், மற்றபடி தமிழகம் முழுவதுமே ஆங்காங்கு மிதமான மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கேற்றார் போல்,நேற்று இரவு முதலே சென்னையில் இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் மேலும் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது
புதியதாக வங்கக்கடலில் உருவாக உள்ள இந்த இரண்டு புயல்களில் ஒரு புயல் 7 ஆம் தேதியும், மற்றொரு புயல் 12 ஆம் தேதியும் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது
ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்து தமிழக மக்களை புரட்டி போட்டு வருகிறது
இந்நிலையில், மீண்டும் இரண்டு புயல்கள் உருவானால், இதனால் ஏற்படும் மழை மற்றும் தண்ணீர் தேக்கத்தால்,2015 ஆம் ஆண்டு தண்ணீரில் மிதந்த சென்னை போன்றே மீண்டும் உருவாகுமோ என்ற அச்சமும்,அதே வேளையில்,காற்று பலமாக வீசக்கூடிய வாய்ப்பு உள்ளதால் அதனால் வரக்கூடிய விளைவுகளை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் உருவாகி உள்ளது