
பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 பேரின் பதவியை பறிக்க கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கி தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிப்ரவரி 18 இல் நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ்., உள்ளிட் 12 எம்.எல்.ஏக்கள் ஓட்டளித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சபாநாயகர் காலம் தாழ்த்தினார் என வாதாடினார்.
தொடர்ந்து சபாநாயக்ர தனபால் மற்றும் சட்டசபை செயலார் உள்ளிட்டோர் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனக்கு கூறி, அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பதில் மனு தாக்கல் செய்யும்போது ஏன் நடவடிக்கை என்பது குறித்து விளக்க மளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது முக்கியமான திருப்பமாகவே அமைந்துள்ளது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஏன் அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பது குறித்து சபாநயாகர் விளக்கமளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.