இறந்துபோன உடலை கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சர் தராத மருத்துவமனை! கையில் சுமந்து சென்ற அவலம்!

 
Published : Oct 04, 2017, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
இறந்துபோன உடலை கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சர் தராத மருத்துவமனை! கையில் சுமந்து சென்ற அவலம்!

சுருக்கம்

Strachor not hospitalized to carry the dead body

மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்காததால், இறந்தவர்களின் உடல்களை சுமந்து சென்ற சம்பவம் வட மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் நம்மை அதிர்ச்சிக்குளாக்கியது. இந்த நிலையில், அதுபோன்றதொரு நிலை தமிழகத்தின்
திருச்சியில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே அயன்புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி சின்னப்பொண்ணுக்கு, கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. 

இதையடுத்து கடந்த 25 ஆம் தேதி மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனிக்காமல் சின்னப்பொண்ணு, நேற்று உயிரிழந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் மனைவி உயிரிழந்த சோகத்தையும் மறைத்துக் கொண்டு, உடலைக் கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் வண்டி கேட்டுள்ளார் ஆம்புலன்ஸ் வண்டிக்காக 6 மணி நேரத்துக்கும் மேலாகவும் மதியழகன் காத்துக் கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ் வண்டி வராததை அடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்ல அவர் முயற்சி செய்தார். ஆனால், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

6 மணி நேரத்துக்கு பிறகும் ஆம்புலன்ஸ் வராததால், கோபமடைந்த மிதியழகன், மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் பின்னர், தனியார் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. ஆனாலும், உடலை ஆம்புலன்சுக்கு கொண்டு செல்ல, அவர்களுக்கு ஸ்டெரச்சர் வழங்கவில்லை.

இதனால் மனமுடைந்த மதியழகன் மற்றும் மகன் சசிகுமார், உடலைக் கையில் சுமந்து வந்து ஆம்புலன்சில் ஏற்றி ஊருக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!