
தமிழ்நாடு அரசுபோக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள இத்தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்லும் பொது மக்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ – மாணவிகளும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் நடக்க இருந்த எம்.பில் மற்றும் தனித்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட இந்த அதர்விகள் மீண்டும் எந்த தேதியில் நடைபெறும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.