
பெரம்பலூர்
பொங்கல் பண்டிகையையொட்டி, பெரம்பலூரில் காவலாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் நேற்று செய்தியாளை சந்தித்தார்.
அப்போது, "பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர், பாடாலூர், குன்னம், அரும்பாவூர், வி.களத்தூர், கை.களத்தூர், மங்களமேடு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் என ஒன்பது காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மக்களுக்கும், காவலாளர்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
தடகளம், கால்பந்து, கைபந்து, கபடி உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
இதன்மூலம், தங்களது எல்லைக்குள்பட்ட ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கும், மக்களுக்கும் அறிமுகம் ஏற்படும்.
எனவே, தங்களது பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் மக்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.