
நீலகிரி
கடந்த 2017-ஆம் ஆண்டு மட்டும் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 6 இலட்சத்து 58 ஆயிரத்து 197 பேர் வருகை தந்துள்ளனர் என்று அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களான சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், காட்டேரி பூங்கா போன்ற பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரித்துள்ளது.
தற்போது, அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மேலும் களை கட்டுகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உதகமண்டலம் தாவரவியல் பூங்கா, குன்னூரில் சிம்ஸ் பூங்கா ஆகியவற்றின் பதிவுகளை வைத்துக் கணக்கிடப்படுகிறது.
இந்த நிலையில், சிம்ஸ் பூங்காவில் கடந்தாண்டு 2017-ல் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அபரிவிதமாக அதிகரித்துள்ளதாம்.
அதன்படி, கடந்த 2014-ஆம் ஆண்டில், 5 இலட்சத்து 35 ஆயிரத்து 711 பேரும்,
2015-ஆம் ஆண்டில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 772 பேரும்,
2016-ஆம் ஆண்டில் 6 இலட்சத்து 32 ஆயிரத்து 832 பேரும்,
2017-ஆம் ஆண்டில் 6 இலட்சத்து 58 ஆயிரத்து 197 பேர் வருகை தந்துள்ளனர்.
2016-ஆம் ஆண்டை விட 25 ஆயிரத்து 365 பேர் கூடுதலாக 2017-ல் வந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.