
கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு தவறான சிகிச்சை அளித்ததனால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை, பெருமாநல்லூரைச் தெய்வானை என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவந்தனர். மருத்துவசிகிச்சை பலனளிக்கததால் இன்று காலை தெய்வானை உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையினாலேயே தெய்வானை உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தெய்வானையின் உறவினர்கள் கூறியதாவது; "அவங்களுக்கு கேன்சர் கட்டி, ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்னு சொல்லி ட்ரீட்மென்ட் தொடங்கியிருக்கிறார்கள். முதலில் 4 ஊசி போடணும். ஊசிக்கு 30,000 ரூபா ஆகும் என சொல்லி. ஊசி போட்டுள்ளார்கலாம். அதன் பிறகு ஒரு ஆபரேஷன் செய்தார்களாம். சில நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்துள்ளார்கள்.
பிறகு வீட்டுக்குப் போன கொஞ்ச நாள்ல, ஆபரேஷன் பண்ண இடத்துல போட்டுருந்த தையலில் நீர் கசிந்ததாக் கூறுகிறார்கள். உடனே, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றார்களாம். ஆனால் அங்கு உள்ள டாக்டர்கள் ஆபரேஷன் பண்ண ஆஸ்பத்திரிக்கே அனுப்பி வைத்தார்களாம். திரும்பவும் அதே மருத்துவமனைக்கு வந்து டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு, ஆபரேஷன் பண்ணப்ப கத்தரி பட்டுருக்கும், சில கேஸ்ல அப்படி நடக்கும். இன்னொரு ஆபரேஷன் பண்ணா சரி ஆய்டும்.. உடனடியா அதுக்கு அமெளன்ட் கட்டுங்கனு டாக்டருங்க சொன்னார்களாம். உங்க மேலதான தப்பு.. நாங்க ஏன் காசு கட்டணும்னு சொல்லிக் என கேட்டுள்ளார்கலாம். அதற்கு அப்படித்தான்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. ஆபரேஷன் ஆன இடத்துல, தையல மட்டும் பிரிச்சுட்டு, ஒரு காட்டன போட்டு க்ளோஸ் பண்ணிட்டாங்க. அப்படியேத்தான் 2 நாள் ஆஸ்பத்திரில வைத்திருந்தார்களாம். ஆனால் இன்று காலை தெய்வானை இறந்தே போனாதாக் கூறுகிறார்கள். டாக்டர்களின் அலட்சியத்தால் தான் இப்படி இறந்துள்ளார். இதை வெளிக்கொண்டு வரணும்னு முயற்சி செய்த உறவினர்களிடம், எங்களை மீறி ஒண்ணும் பண்ண முடியாதுன்னு திமிரா பதில் சொன்னதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல போலீசை விட்டு பணம் கேட்பதாக சொல்கிறார்களாம்" இதனால் தெய்வானையின் உடலை வாங்க மறுத்து, அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதர் பிறகு அங்கு வந்த போலீசார் சமதானப்படுத்திய பிறகே உடலை வாங்கியுள்ளனர்.