சேலம் விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் வைக்க கோரிக்கை...

 
Published : Jan 05, 2018, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
சேலம் விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் வைக்க கோரிக்கை...

சுருக்கம்

Former Chief Minister Jayalalithaa name to Salem airport

நாமக்கல்

சேலம் விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளது கொங்கு வேளாளர் சங்கம்.

கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் காளியண்ணன் மற்றும் பொருளாளர் பொன்.கோவிந்தராசு ஆகியோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அந்த மனுவில், "கொங்கு நாட்டைச் சேர்ந்த தீரன் சின்னமலை சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அவரது புகழைப் போற்றும் வகையில், அவரது பெயரை கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு சூட்டவேண்டும்.

இதேபோல, கொங்கு  மக்கள் மீது பாசம் கொண்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சேலம் விமான நிலையத்துக்கு வைக்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளனர்.

கொங்கு வேளாளர் சங்கத்தின் இந்த  மனுவை முதல்வர் ஏற்பாரா? அல்லது நிராகரிப்பாரா? என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!