10 தனிப்படைகள் அமைத்தும் எந்த துப்பும் கிடைக்காத ஜெயக்குமார் மரண வழக்கு! வேறுவழியில்லாமல் டிஜிபி அதிரடி முடிவு

By vinoth kumar  |  First Published May 23, 2024, 11:22 AM IST

கடந்த ஏப்ரல் மாதம் மாயமான நிலையில் 4-ம் தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தும் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் மாயமான நிலையில் 4-ம் தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Savukku: என் பையன் அப்படி பண்ணல! குண்டர் சட்டத்தை ரத்து செய்யுங்கள்! கோர்ட் படியேறிய சவுக்கு சங்கரின் தாயார்!

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயக்குமார் இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீசார், பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குடும்பத்தினர், வீட்டுப் பணியாளர்கள், நண்பர்கள் பலரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையும் படிங்க: அமைச்சரவையை மாற்ற திட்டமிடும் ஸ்டாலின்.? மாற்றப்படுபவர்கள் யார்.? புதிய அமைச்சர்கள் யாருக்கு வாய்ப்பு.?

இந்நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

click me!