பதவி உயர்வில் கான் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்…

Asianet News Tamil  
Published : Dec 29, 2016, 11:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
பதவி உயர்வில் கான் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்…

சுருக்கம்

பதவி உயர்வில் கான் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம், பொறியாளர்கள் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம், தொலைத் தொடர்பு பொறியாளர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

கடலூர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.தனசேகர் (AI BSNL EA) தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் டி.விஸ்வலிங்கம் (AI BSNL EA) வரவேற்றார். மாவட்டத் தலைவர் புதுச்சேரி எஸ்.சதாசிவம் (AI BSNL EA) முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.நடராஜன் (AI BSNL EA) தொடக்கவுரை ஆற்றினார். மாவட்டச் செயலர் ஆர்.ஸ்ரீதர் NFTE, துணைச் செயலர் ஆர்.வி.ஜெயராமன் BSNL EU உம வாழ்த்துரை வழங்கினர்.  மாவட்டச் செயலர் எஸ்.ஆனந்த் (AI BSNL EA) கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.

இதில், 42 சதவீத வாக்குகள் பெற்ற அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்திற்கு இரண்டாவது பெரிய சங்கம் என்றும், முதல் சங்கத்திற்கு நிகரான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், 1.1.2007-க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ.22820 என அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். 30 சதவீத ஓய்வூதிய பலனை பிஎஸ்என்எல் நேரடியாக பணியமர்த்திய அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும். பதவி உயர்வில் கான் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தினர்.

PREV
click me!

Recommended Stories

பனி விலகி மழை வருமா? வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
மோடி மேடையில் பிரேமலதா.. இறுதிக்கட்ட பேரத்தை முடித்த அதிமுக..! இத்தனை சீட்டுகளா..?