மாட்டு இறைச்சி தடையை திருமப் பெற வேண்டும் - மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

Asianet News Tamil  
Published : Jun 03, 2017, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
மாட்டு இறைச்சி தடையை திருமப் பெற வேண்டும் - மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

சுருக்கம்

need to get back the cow meat ban

நாகப்பட்டினம்

மாட்டு இறைச்சி தடையை திருமப் பெற வேண்டும் என்று நாகப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாடு, எருது, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக் கூடாது, வெட்டக் கூடாது என்று மோடி அறிவித்தார். மோடி அரசின் இந்த தடையைக் கண்டித்து மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் செய்யதுரியாசுதீன் தலைமை வகித்தார்.

மாநில விவசாய அணிச் செயலாளர் செய்யதுமுபாரக், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைச் செயலாளர் ஷேக்அப்துல்லா இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “மாடு, எருது, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக்கூடாது, வெட்டக்கூடாது என்று அறிவித்துள்ள மோடி அரசிற்கு கண்டனம் தெரிவிப்பது

மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்த மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது

மற்றும் இந்த தடைச் சட்டத்திய திரும்ப பெறவேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்டத் துணைச் செயலாளர் ஹமீதுஜெகபர், மாவட்டப் பொருளாளர் பரக்கத்அலி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்டத் துணைச் செயலாளர் ஷேக்மன்சூர் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'செக்' வைக்கும் சிபிஐ? 8 மணி நேரம்.. ஆதவ், ஆனந்திடம் கிடுக்குப்பிடி கேள்விகள்.. பதறும் தவெக!
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா? சென்னையில் இருந்து 500+ சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!