ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் அல்லது யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் நான் செயலில் இல்லை. எந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவையும் நான் நிர்வகிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி மக்களுக்கான சேவையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என நடராஜ் தெரிவித்துள்ளார்.
போலி செய்தி- நடராஜ் மீது வழக்கு பதிவு
இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்வோமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்கள் வாக்கு பெறும் அளவிற்கு திமுக தரம் தாழ்ந்து போகவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக தனியார் தொலைக்காட்சி பெயரில் போலியாக பதிவு செய்யப்பட்ட செய்தியை வாட்ஸ் அப் குழுவில் முன்னாள் டிஜிபி பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து நடராஜ் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தமிழக முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் விளக்கம் அளித்துள்ளார்.அதில், "எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளால் நான் அதிர்ச்சியடைந்தேன்.
சமூகவலைதளத்தில் செயல்படவில்லை
ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் அல்லது யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் நான் செயலில் இல்லை. எந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவையும் நான் நிர்வகிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி மக்களுக்கான சேவையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ஏழை மக்கள் மற்றும் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி வருகிறேன். மேலும் எந்த ஒரு வாட்ஸ் அப் குழுவிலும் சுறு சுறுப்பாக இல்லை. பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் நான் எந்த பொது தளத்திலும் பொய்யான செய்திகளை பரப்பவில்லை. என் மீது பரப்ப்படும் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன்.
முதல்வர் மீது மரியாதை
இந்த வழக்கில் எனது பெயர் எப்படி இழுக்கப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்த பொது மேடையிலும் இதைப் பதிவிடவில்லை. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் உள்ள வாட்ஸ் அப் குழுவில் பொது வெளியில் பேசியதை @suryaborntowin ஒரு பொது சமூக ஊடக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவலைக்குரிய விஷயம் என தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான தனி மனித உரிமை மீறலாகும். அரசியல் பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும், முதல்வர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது, நான் அவதூறு பரப்பியதாக அவருக்கு தவறாகத் தெரிவிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என நடராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
மாஜி டிஜிபி நடராஜ் மீது முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் வழக்கு.! காரணம் என்ன.?