நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By Pothy Raj  |  First Published Sep 14, 2022, 3:58 PM IST

தமிழகத்தின் மலைப்பகுதிகளில் வாழும் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் திட்டத்துக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முன்டா தெரிவித்தார்.


தமிழகத்தின் மலைப்பகுதிகளில் வாழும் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் திட்டத்துக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முன்டா தெரிவித்தார்.

நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர்(எஸ்டி)ப ட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் கடிதம் எழுதியிருந்தார்.

Tap to resize

Latest Videos

இந்த கடிதத்துக்கு பலன் கிடைக்கும் வகையில் 5 மாதங்களில் நரிக்குறவர் இனமக்கள் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதற்கு முன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நரிக்குறவர் இன மக்கள் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி20 நாடுகளுக்கு தலைமையேற்கும் இந்தியா.. மத்திய அரசு அறிவிப்பு !

மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முன்டா இன்று நிருபர்களுக்குப்பேட்டியளித்தார் அவர் கூறுகையில் “ பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பழங்குடியினத்துறை சார்பில் வைக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, இமாச்சலப்பிரதேசத்தில் டிரான்ஸ்-கிரி பகுதியில் வசிக்கும் ஹத்தி சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளி்க்கப்பட்டது.மத்தியஅரசின் அனுமதியால் 1.60 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரிஜ்ஜா சமூகத்தையும் பழங்குடியினப் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளி்க்கப்பட்டது. தமிழகத்தில் மலைப்பகுதிகளில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவர் சமூகத்தினரையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

சீனாவுக்கு சிரமமில்லாமல் இந்தியப் பகுதியை தாரை வார்த்த பிரதமர் மோடி: ராகுல் காந்தி விளாசல்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பேருந்து நிலையம் அருகே நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பலரும் தங்கியுள்ளனர். அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலரின் பேட்டியை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த மாணவிகளை தலைமைச்செயலகம் அழைத்துப் பேசி, கல்விக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்தார்.

அதோடு மட்டுமல்லாமல் பால்வளத்துறை மு.நாசரிடம் நரிக்குறவர் சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்புக்குச் சென்று அவர்களின் குறைகளை கேட்டுவருமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

முழு சம்பளத்தையும் கொடுக்காதவரின் மெர்சிடஸ் காருக்கு தீ வைப்பு; அதிர்ச்சி வீடியோ!!

அதன்பெயரில் அமைச்சர் நாசர் நரிக்குறவர் சமூகத்தினரிடம் சென்று குறைகளைக் கேட்டார். அப்போது செல்போனில் காணொலி மூலம் அந்த சமூகத்தினரிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது ஒரு பெண், தங்கள் சமூகத்தை பழங்குடியினப் பிரிவில் சேர்க்குமாறு கோரி்க்கை விடுத்தார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

அதன்படி மறுநாளே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினப் பிரிவில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!