Narayanan Thirupathy: வசைபாடுவது ஏன்? வாயை கட்டிக் போடுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி அட்வைஸ்

Published : Mar 04, 2023, 03:47 PM ISTUpdated : Mar 04, 2023, 03:56 PM IST
Narayanan Thirupathy: வசைபாடுவது ஏன்? வாயை கட்டிக் போடுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி அட்வைஸ்

சுருக்கம்

முதல்வர் ஸ்டாலின் ஒருசில அமைச்சர்கள், கூட்டணி அமைப்பினரின் வாயை கட்டி போடுட வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் கூறுகிறார்.

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகின்றனர் என்ற வதந்தியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவரும் சூழலில் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் இந்தப் பிரச்சினை குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், "பீகார் மற்றும் வட மாநிலத்தவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்ற வதந்தியை பரப்புவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிவது ஆறுதல் அளிக்கிறது என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் ஒருசில அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வாயை கட்டிப்போடுவது முதல்வர் மு. க. ஸ்டாலினுடைய பொறுப்பும் கடமையும் ஆகும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழர்கள் எங்க தோஸ்து.. நாங்க பயந்து சொந்த ஊருக்கு போகல! வடமாநிலத்தினருடன் ஏசியாநெட் தமிழ் நேர்காணல்

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாகவும், இதற்கு பயந்து இங்கு பணியாற்றி வந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் செல்வதாகவும் வதந்தி பரவுகிறது. வட மாநிலத்தவரை தமிழர்கள் தாக்குவது போல போலியான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டன.

செவ்வாய்க்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட விஷமிகள், தமிழர்கள் வடமாநிலத்தவரைத் தாக்குவதால்தான் அவர்கள் அஞ்சி வெளியேறுகிறார்கள் என்று புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.

இதனைத் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. காவல்துறை போலி வீடியோவைப் பகிர்ந்து மூவரைக் கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், வெறுப்பைத் தூண்டும் வகையில் வதந்தியைப் பரப்புபவர்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். போலியான தகவல்களை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை.. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?