முடிந்தால் கை வைத்துப்பார் வேல்முருகா! ஒரு முறை திகார் சிறைக்கு போனாத உனக்கு அறிவு வரும்! கொந்தளிக்கும் பாஜக!

Published : Feb 19, 2025, 03:44 PM IST
முடிந்தால் கை வைத்துப்பார் வேல்முருகா! ஒரு முறை திகார் சிறைக்கு போனாத உனக்கு அறிவு வரும்! கொந்தளிக்கும் பாஜக!

சுருக்கம்

மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டும் விதமாக பேசியதாகவும், பிரதமரை ஒருமையில் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ள பாஜக, வேல்முருகன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், வைகோ, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் வேல்முருகன் பேசுகையில்: வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். ஒன்றிய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என ஆவேசமாக பேசியிருந்தார். 

இந்நிலையில் ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக உரிய சட்டத்திலும் கைது செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்து சிறையிலடைக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வன்முறையை தூண்டும் வகையில் பேசியதோடு, மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டும் விதமாகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், பிரதமரை ஒருமையில் பேசி, கீழ்த்தரமாக விமர்சித்து, இந்தியாவின் நிதியமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வன்கொடுமை சட்டத்திலும், ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக உரிய சட்டத்திலும் கைது செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்து சிறையிலடைக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

மேலும், மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் செயல்படும் இந்த  திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது என்ஐஏ வழக்கு பதிந்து, சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். 

ஒரு முறை திகார் சிறைக்கு அனுப்புவித்தால் தான் தொடர்ந்து தீவிரவாத, பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடும் இந்த நபருக்கு அறிவு வரும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவியேற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தன் பொறுப்பிலிருந்து கடமை தவறி விட்டதாகவே கருதப்படுவார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கச்சேரி வைத்துக் கொள்வதாக சபதமிட்டுள்ளார். முடிந்தால் கை வைத்துப்பார் வேல்முருகா!  சிறையில் களி தின்ன ஆசையா வேல்முருகா? என்று காட்டமாக தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 16 January 2026: Ritu Varma - பட்டுச் சேலையில் வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும் லுக்கில் நடிகை ரிது வர்மா! சூப்பர் கிளிக்ஸ்!!
சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!