தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு

Published : Dec 07, 2025, 09:39 AM IST
Nanjil Sampath

சுருக்கம்

தவெக அலுவலகம் பிரம்மாண்டமாக உள்ளது. ஆனால் அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத்  திமுகவை எகிற அடிக்க ஆரம்பித்துள்ளது உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் மூத்த தலைவரும், சிறந்த பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். அவரை தவெகவின் பரப்புரை செயலாளராக விஜய் நியமனம் செய்துள்ளார். முன்னதாக, தவெகவில் இணைந்தது குறித்து பெருமையாக பேசியிருந்த நாஞ்சில் சம்பத், 'தவெக லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்த காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்டவர்களை தவெக கொள்கை தலைவர்களாக வைத்துள்ளது' எண்று கூறியிருந்தார்.

என்னை இயங்க வைத்த விஜய்

6 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த என்னை விஜய் மீண்டும் இயங்க வைத்ததாகவும் பெருமையுடன் தெரிவித்து இருந்தார். மேலும் ''நான் விஜய்க்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியது முதலே அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாட ஆரம்பித்தார்கள். என்னை முழுவதுமாக நிராகரித்த ஆரம்பித்தார்கள். நான் திமுக தலைமையிடம் ஏதும் கேட்டதில்லை. கேட்டாலும் அவர்கள் ஒரு சைக்கிள் கூட வாங்கித் தர மாட்டார்கள்'' என்றும் நாஞ்சித் சம்பத் வேதனையுடன் கூறியிருந்தார்.

அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும்

இந்த நிலையில், தவெக அலுவலகம் பிரம்மாண்டமாக உள்ளது. ஆனால் அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என்று நாஞ்சில் சம்பத் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய நாஞ்சில் சம்பத், ''நேற்று தான் தவெக அலுவலகம் சென்று பார்த்தேன். பிரமாதமாக உள்ளது. அறிவாலயம் போனால் சுடுகாடு மாதிரி இருக்கும். தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட தம்பிகள் லேப்டாப் வைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தவெக செயல்பாடுகளால் ஆச்சரியம்

234 தொகுதிகளில் எத்தனை வாக்காளர்கள்? எத்தனை பெண்கள்? எத்தனை ஆண்கள்? என அனைத்து லிஸ்ட்டையும் எடுத்து வைத்துக் கொண்டு நாளைக்கே களத்துக்கு வருவதற்கு அவர்கள் ரெடியாக உள்ளனர். திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் பிரமாதமாக உள்ளது. தொழில்நுட்பரீதியாக தவெகவினர் செயல்பாடுகளை பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன்'' என்று தெரிவித்துள்ளார்.

திமுகவை எகிறி அடிக்கும் நாஞ்சில் சம்பத்

மதிமுகவில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் வெளியே வந்த பின்னர் நாஞ்சித் கடந்த 6 ஆண்டுகளாக எந்த அரசியல் பணிகளிலும் ஈடுபடவில்லை. திராவிட இயக்க பேச்சாளரான அவர் தொடர்ந்து திராவிட கொள்கைகளுக்கு குறிப்பாக திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். அவர் விஜய்க்கு ஆதரவாக பேசுவதை அறிந்ததும் தாங்கள் நடத்திய அறிவுத்திருவிழாக்கு திமுக அழைப்பு விடுக்கவில்லை. அந்த விரக்தியில் தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் இப்போது திமுகவை எகிற அடிக்க ஆரம்பித்துள்ளது உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!