
திருவாரூர் மாவட்டத்தில் ONGC நிறுவனத்திற்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு அணைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது ONGCயின் தளவாடப் பொருட்கள் உட்பட நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு தொடர்பான விசாரணை திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போராட்டக்குழு தலைவர் என்ற அடிப்படையில் அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர் பிஆர் பாண்டியனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.