நாமக்கல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். ஏன்?

First Published Jan 12, 2017, 9:24 AM IST
Highlights

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று மத்திய அரசையும், மாநில அரசையும் நம்பி நம்பி வெறுத்துப் போன தமிழக மக்கள் இந்த முறை தடை அதை உடை என்று தாமே களத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சல்லிக்கட்டுக்கு ஆதரவுத் தெரிவித்து போராட்டங்கள் வலுக்கின்றன.

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீங்கெல்லாம் முகநூலில் பதிவிட தான் முடியும் என்று முழக்கமிட்ட அரசியல்வாதிகளுக்கு இளைஞர் படை தங்களது பதிலை முகநூல் மூலமாகவே தெரிவித்தனர்.

மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கான கூட்டம் அனைத்தும், வாட்ஸ் ஆப், முகநூல், டிவிட்டர் என சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுத் திரட்டப்பட்ட கூட்டமே.

இந்தமுறை சல்லிக்கட்டு நடத்தியே ஆகனும் என்று போர் முழக்கக் குரல்கள் அனைத்து இடங்களிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர்களும் சல்லிக்கட்டுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளனர்.

இன்று, நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆங்காங்கே, வலுக்கும் போராட்டங்களைப் பார்க்கும்போது, இந்த ஆண்டு சல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உதித்துள்ளது.

click me!