குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல்.. திமுகவை எகிறி அடித்த நயினார் நாகேந்திரன்!

Published : Mar 11, 2026, 06:50 PM IST
Nainar Nagendran

சுருக்கம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குடும்ப ஆட்சிக்கும், மக்களுக்குமான தேர்தல் என்று திருச்சியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன் உள்பட தேசிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை தேர்தல் குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல் என்று தெரிவித்தார்.

தாய் மாமன் சீர் கொண்டு வரும் மோடி

இது தொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ''இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் இது என்று சொன்னார். நான் சொல்கிறேன். இது ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்குமான தேர்தல். குடும்ப ஆட்சியை முடிவு கட்டுவதற்கான தேர்தல். பிரதமர் மோடி எப்பொதெல்லாம் சென்னைக்கு, தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ, தாய் மாமன் சீர் கொண்டு வருவது போல இன்றைக்கும் 5,600 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

தமிழ் கலாசாரத்தை பேசும் பிரதமர் மோடி

மதுரைக்கு வரும்போது 4,400 கோடி ரூபாய் திட்டங்கள் கொண்டு வந்தார். 2025ல் பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வந்து 5,5000 கோடி ரூபாய் மதிப்பிலான துறைமுக திட்டங்களை கொண்டு வந்தார். இதெயெல்லாம் பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக தந்தது. பிரதமர் மோடி மலேசியாவுக்கு போனாலும் தமிழை பற்றி பேசுகிறார். எங்கு போனாலும் தமிழக கலாசாரத்தை பற்றி பேசுகிறார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி

பாஜக அரசு தமிழகத்துக்கு என்ன கொடுத்தது என முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். கடந்த காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்நதை காட்டிலும் 14 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வந்த மாபெரும் தலைவர் பிரதமர் மோடி. இதை மறுக்க முடியுமா?'' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மேற்கு தொடர்ச்சி மலை முதல் டெல்டா வரை.. 'குளு குளு' அப்டேட் சொன்ன வானிலை மையம்!
விஜய் ஒரு கனவுல இருக்கார்; 4 சீட் கூட ஜெயிக்க முடியாது: பியூஷ் கோயல் கிண்டல்!