தமிழ்நாடு வாழ்க என முழக்கமிட்டு நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் வைத்து சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் கொண்டாடியுள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாகை மாவட்டத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மண்பானையில் பொங்கல் வைத்து தொகுதி மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினரோடு சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடுவேன்! அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்
தமிழகம் என்று உச்சரிக்க வேண்டும் என்று கூறிய ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வாழ்க, தமிழ் வாழ்க என முழக்கமிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். நிகழ்வில் விசிக பொறுப்பு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நாகை நகர செயலாளர் முத்துலிங்கம், மாவட்ட துணை செயளாலர் நாகை சாதிக், முற்போக்கு மாணவர் கழக அமைப்பாளர் நாகூர் முருகன், மாவட்ட துணை செயலாளர் பேரறிவாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Pongal: பழனிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்: 3 மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம்!
இதையும் படியுங்கள்: தமிழக அரசின் பெரியார், அண்ணா, திருவள்ளுவர் விருதுகள் அறிவிப்பு