நாகை மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்

Asianet News Tamil  
Published : Jun 24, 2017, 10:10 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
நாகை மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்

சுருக்கம்

Nagapattinam fisher man where arrested by Sri Lanka Navy

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்துச் செல்வது அன்றாட வாடிக்கையாகி விட்டது. மீன்பிடி வலைளை அறுத்தெறிந்தும், மீன்களை கடலில் கொட்டியும் சிங்கள கடற்படையினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் நாகையைச் சேர்ந்த  மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. விசைப்படகு ஒன்றில் 8 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி 8 மீனவர்களையம் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் இவர்கள் அனைவரும் அனுமந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் இலங்கையின் இக்கைது நடவடிக்கை நாகை மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஊழல் கறை என் நிழலிலும் படாது.. ஊழல் செய்யவும் விட மாட்டேன்.. மேடையில் சபதம் எடுத்த விஜய்!
அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்.. தீய சக்தி; ஊழல் சக்தி வர விடமாட்டேன்.. விஜய் சூளுரை!