
காஞ்சிபுரம்
மாமல்லபுரத்தில் தங்கும் விடுதியில் ரத்த வெள்ளத்தில் கொலை பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை இரண்டே மணிநேரத்தில் பிடித்து கைது செய்து காவலாளர்கள் அசத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் புதன்கிழமை காலை தம்பதி எனக் கூறி இருவர் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அன்று மாலை அறையை சுத்தம் செய்வதற்காக விடுதி ஊழியர் சென்றுள்ளார். அங்கு தம்பதி எனக் கூறி வந்த பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதனைப் பார்த்த ஊழியர், மேலாளரிடம் தெரிவித்தார். மேலாளர் காவலாளர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து மாமல்லபுரம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள சோதனைச் சாவடி அருகே கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் அனுமந்தன், தாழம்பூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் உள்ளிட்டோர் மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தை சோதனையிட்டனர். அப்போது, அதில் இருந்த கொலையாளியை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் சென்னையைச் சேர்ந்த சுகுமார் (48) என்பதும், செயின்ட் தாமஸ் மௌண்ட்டைச் சேர்ந்த வசந்தியுடன் (45) தகாத உறவு இருந்து வந்ததும் தெரிந்தது.
வசந்தியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுகுமார் அவரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். இதனையடுத்து சுகுமார் கைது செய்யப்பட்டார்.
கொலையாளியை இரண்டு மணிநேரத்தில் கண்டுபிடித்த ஆய்வாளர் உள்ளிட்ட காவலாளர்களை எஸ்.பி. சந்தோஷ் அதிமானி வெகுவாகப் பாராட்டினார்.