துப்பாக்கி சூட்டுக்கும் இலங்கை கடற்படைக்கும் சம்பந்தமில்லை… மைத்ரிபால சிறீசேனா திமிர் பேச்சு…

 
Published : Mar 08, 2017, 07:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
துப்பாக்கி சூட்டுக்கும் இலங்கை கடற்படைக்கும் சம்பந்தமில்லை… மைத்ரிபால சிறீசேனா திமிர் பேச்சு…

சுருக்கம்

mythri bala srisena speecj

துப்பாக்கி சூட்டுக்கும் இலங்கை கடற்படைக்கும் சம்பந்தமில்லை… மைத்ரிபால சிறீசேனா திமிர் பேச்சு…

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் தனுஷ்கோடியை அடுத்த ஆதம்பாலம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இநத் சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ஜெகதாப் பட்டணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு இதில் தலையிட்டு இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இந்தோனேசிய நாட்டின் தலைநகரான ஜகார்தா-வில் 20-ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்றுள்ளார்.

இதில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது தமிழக  மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறீசேனாவிடம் ஹமீது அன்சாரி பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மைத்ரிபால சிறீசேனா, தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் இலங்ககை கடற்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை  என தெரிவித்தார். அதேநேரத்தில்  இது போன்ற சம்பவம் இனிமேல் நிகழாது என சிறீசேனா வாக்குறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கலைஞர் அரசு போக்குவரத்து கழகமாகும் அரசு போக்குவரத்து கழகம்..? பகீர் கிளப்பும் எச்.ராஜா