வானிலிருந்து விழுந்த ‘மர்ம பொருள்’... – விமான பாகமா...?? பரபரப்பு தகவல்கள்

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 03:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
வானிலிருந்து விழுந்த ‘மர்ம பொருள்’... – விமான பாகமா...?? பரபரப்பு தகவல்கள்

சுருக்கம்

திண்டுக்கல் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மோதுபட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் நேற்று தனது தோட்டத்தில் தொழிலாளர்களுடன் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென  வானத்தில் இருந்து ஒரு மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த வேலுச்சாமி அருகில் சென்று பார்த்த போது அலுமினிய பாகம் ஒன்றில் சில வயர்கள் சுற்றப்பட்டு அதிலிருந்து புகை வந்துள்ளது.

வேலுச்சாமி இது தொடர்பாக காவல்துறையினருக்கு தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் மற்றும்  தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த  மென்பொருள் ஆய்வாளர் அந்த பொருள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது,

ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்தில் விழுந்த மர்ம பொருள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது விமானத்தின் உதிரி பாகமாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதால் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் தரும் தகவலின் பேரில்தான் உண்மை நிலை தெரிய வரும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

வானிலிருந்து திடீரென விழுந்த மர்ம பொருளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுளது.

PREV
click me!

Recommended Stories

2026 அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி..!
முடியவே முடியாது.. ஓசூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு.. இதுதான் காரணம்!