தாய் கண் முன்னே மகன் சரமாரி வெட்டி கொலை... 3 பேர் கைது

Published : Nov 08, 2018, 01:42 PM IST
தாய் கண் முன்னே மகன் சரமாரி வெட்டி கொலை... 3 பேர் கைது

சுருக்கம்

முன் விரோத தகராறில், வீட்டில் புகுந்து தாய் கண் முன்னே மகனை சரமாரியாக வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன் விரோத தகராறில், வீட்டில் புகுந்து தாய் கண் முன்னே மகனை சரமாரியாக வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, பூமிநாதன் கோயில் தெருவை சேர்ந்தவர் நூர்முகமது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து, முத்துப்பாண்டி, முருகன் ஆகியோருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. 

இந்நிலையில், நேற்று இரவு நூர்முகமது, தனது தாயுடன் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது, முகத்தை துணியால் மூடியபடி வந்த 3 பேர், நூர்முகமதுவை, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதை பார்த்ததும், அவரது தாய் அலறி கூச்சலிட்டார். 

இதை சுதாரித்து கொண்ட நூர்முகமது வெட்டு காயங்களுடன், வெளியே தப்பியோடினார். ஆனால், அவரை விடாமல் விரட்டி சென்ற 3 பேர், சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதற்கிடையில், அவரது தாயில் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர்.  பொதுமக்களை கண்டதும், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில் முன் விரோத தகராறில் வைரமுத்து, முத்துப்பாண்டி, முருகன் ஆகியோர் நூர்முகமுதுவை வெட்டி கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த 3 பேரையும் இன்று காலை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

கிளிமஞ்சாரோ சிகரத்தில் தமிழக சிறுவர்களின் இமாலய சாதனை! ரூ.1,00,000-ஐ அள்ளிக்க கொடுத்த நயினார் பாலாஜி! என்ன காரணம்?
இந்த சோகத்துக்கு ஒரு முடிவே இல்லையா? வெடி விபத்தில் தூள் தூளாக சிதறிய பட்டாசு ஆலை! 4 பேர் பலி!