அரசுப்பள்ளிகளை அடுத்த லெவலுக்கு மாற்றும் செங்கோட்டையன்!! அதிரடி மாற்றங்களால் குவியும் வாழ்த்துகள்...

By sathish kFirst Published Oct 5, 2018, 12:10 PM IST
Highlights

யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

விருதுநகரில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு உத்தரவுகளை வழங்கும் விழா நேற்று விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  பங்கேற்று,  8  மாவட்டங்களை சார்ந்த 322 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கினர். 

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்; ‘‘ நவம்பர் மாதத்திற்குள் 3௦௦௦ பள்ளிகளுக்கும் மேலாக ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் அமைக்கப்பட்டு வகுப்புகள் எடுக்கப்படும். யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் கொண்டுவரப்படும். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 413 நீட் சிறப்பு வகுப்புகள் சிறப்பாக இயங்கி வருகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க வரும் கல்வியாண்டு முதல் யூடியூப் மூலம் பாடம் கற்பிக்கப்பட உள்ளது. டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் பணி நியமனம் வழங்கப்படும். குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. 

இன்னும் ஒ௫ வாரத்தில் தமிழகத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடிகளை எல்கேஜி மற்றும் யூகேஜி யாக மாற்றி குழந்தைகளுக்கு சிறந்த ஆங்கிலமும், தமிழும் சிறந்த முறையில் கற்றுக்கொடுக்கப்படும்’’ என்றார்.

click me!